“ஹாட்ரிக் ரூ.100 கோடிகளுக்கு நன்றி!” — பிரதீப் ரங்கநாதன் உணர்ச்சி பதிவு

Date:

“ஹாட்ரிக் ரூ.100 கோடிகளுக்கு நன்றி!” — பிரதீப் ரங்கநாதன் உணர்ச்சி பதிவு

தனது தொடர் வெற்றிகளுக்கு நன்றி தெரிவித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாருண், ரோகிணி உள்ளிட்டோர் நடித்த ‘டியூட்’ படத்தை இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படம் அக்டோபர் 17 அன்று வெளியானது. சிறந்த வரவேற்பைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ.100 கோடியை தாண்டிய வசூலை பதிவு செய்துள்ளது.

இது வரை பிரதீப் நடித்த ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ படங்களும் ரூ.100 கோடியை கடந்துள்ளன. இதனால், மூன்று படங்களும் வெற்றிகரமாக நூறு கோடி கிளப்பில் இணைந்துள்ளன.

இந்த வெற்றியை முன்னிட்டு வெளியிட்ட வீடியோவில் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது:

“என் முதல் மூன்று படங்களும் ஹாட்ரிக் ரூ.100 கோடிகளை தாண்டியுள்ளன. இதற்காக எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் என் இதயப்பூர்வ நன்றி. ஆனால் இந்த வெற்றிக்கு காரணம் நான் அல்ல — நீங்கள்தான்!

நீங்கள் எனக்கு தந்த ஆதரவும், என்னை உங்களுடைய வீட்டிலுள்ள ஒருவராகக் கண்ட பாசமும் — இதற்காக நான் சொல்ல வார்த்தைகளே இல்லை. மிக்க நன்றி.

எனக்கு வாய்ப்பளித்த ஜெயம் ரவி, ஐசரி கணேஷ், அர்ச்சனா கல்பாத்தி, மைத்ரி மூவி மேக்கர்ஸ், மற்றும் இயக்குனர்கள் அஸ்வந்த் மாரிமுத்து, கீர்த்தீஸ்வரன் ஆகியோருக்கும் நன்றி. மேலும், தெலுங்கு, கேரளா, கர்நாடகா ரசிகர்களுக்கும் எனது நன்றி!”

என்று பிரதீப் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல் – வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை கண்காணிக்க உத்தரவு

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல் – வாக்காளர் பட்டியல் திருத்தப்...

‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?

‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? கரூர்...

ரஞ்சி கோப்பையில் 5 விக்கெட்டுகள் பறித்த ஷமி – குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி!

ரஞ்சி கோப்பையில் 5 விக்கெட்டுகள் பறித்த ஷமி – குஜராத்தை 141...

போஸ் வெங்கட் இயக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் டிராமா – இசையில் யுவன் ஷங்கர் ராஜா!

போஸ் வெங்கட் இயக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் டிராமா – இசையில் யுவன்...