இன்டெல் மணி ரூ.300 கோடி மதிப்பில் கடன்பத்திரம் வெளியீடு
நிதிசார் சேவைகள் வழங்கும் இன்டெல் மணி நிறுவனம் தனது 6-வது பாதுகாக்கப்பட்ட, திரும்பப் பெறத்தக்க மற்றும் மாற்ற முடியாத கடன்பத்திரங்களை (NCD) வெளியிடுகிறது. இந்த வெளியீடு அக்டோபர் 13 முதல் 28 வரை நடைபெறும்.
இது தொடர்பாக நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உமேஷ் மேனன் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு கடன்பத்திரத்தின் முகமதிப்பு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டின் அடிப்படை அளவு ரூ.150 கோடி ஆகும், மேலும் அதே அளவு (ரூ.150 கோடி) வரை கூடுதல் சந்தாவை தக்கவைத்து, மொத்தம் ரூ.300 கோடி நிதி திரட்டப்படும்.
இந்த கடன்பத்திரங்களுக்கு இன்போமெரிக்ஸ் ரேட்டிங்ஸ் நிறுவனம் ‘IVR A-/Stable’ என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 12.25% வட்டி வருவாய் பெறலாம், மேலும் 72 மாதங்களில் முதலீடு இரட்டிப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கடன்பத்திரங்கள் மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட உள்ளன. குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உமேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.