இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு – பவுமா மீண்டும் கேப்டனாக

Date:

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு – பவுமா மீண்டும் கேப்டனாக

இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது.

அணியை டெம்பா பவுமா மீண்டும் கேப்டனாக வழிநடத்துகிறார்.

இந்திய சுற்றுப்பயணத்தின் போது தென் ஆப்பிரிக்கா 2 டெஸ்ட், 3 ஒருநாள், மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பின்னர் தென் ஆப்பிரிக்கா 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது. சமீபத்திய பாகிஸ்தான் தொடரை 1-1 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா–தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 22 அன்று குவாஹாத்தியில் நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணியினர்:

டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி சோர்ஸி, ஸுபயர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்க்கோ யான்சன், கேஷவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரேன்.

காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரை தவறவிட்டிருந்த பவுமா, தற்போது மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார்.

அவர் கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் விநியோகம் தொடக்கம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் விநியோகம் தொடக்கம் தமிழகத்தில் பிளஸ்...

இளம் டென்னிஸ் வீரர்களை ஊக்குவிக்கும் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம்

இளம் டென்னிஸ் வீரர்களை ஊக்குவிக்கும் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம் சென்னை ஓபன்...

“பேய் கதை எப்போதும் சினிமாவை விட்டு போகாது” – இயக்குநர் சுப்பிரமணிய சிவா

“பேய் கதை எப்போதும் சினிமாவை விட்டு போகாது” – இயக்குநர் சுப்பிரமணிய...

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்திய அரசு...