“மிகப்பெரிய வெற்றிக்கு பொறுமை அவசியம்!” – ‘சுயம்பு’ பட ஹீரோ நிகில் சித்தார்த்தா
பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா நாயகனாக நடிக்கும் ‘சுயம்பு’ படம் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் சம்யுக்தா மேனன், நபா நடேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் புவன் மற்றும் கர் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, இசை – ரவி பஸ்ரூர்.
மில்லினியத்துக்கு முந்தைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சில உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட கற்பனைக்கதை என கூறப்படுகிறது. படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், நிகில் சித்தார்த்தா,
“மிகப்பெரிய வெற்றிக்கு பொறுமை அவசியம். அற்புதமான ஒன்று உருவாகிக் கொண்டிருக்கும்போது பொறுமை முக்கியம் என்பதை ‘சுயம்பு’ எனக்கு கற்றுத்தந்தது,”
என்று தெரிவித்துள்ளார். இது அவருடைய 20வது திரைப்படமாகும்.