‘சார்பட்டா 2’ அடுத்தாண்டு தொடங்குகிறது – ஆர்யா உறுதி!

Date:

‘சார்பட்டா 2’ அடுத்தாண்டு தொடங்குகிறது – ஆர்யா உறுதி!

நடிகர் ஆர்யா, தனது புதிய திரைப்படமான ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பை அடுத்தாண்டு தொடங்கவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது அவர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தினேஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

‘வேட்டுவம்’ படப்பணிகளை நிறைவு செய்தவுடன், ஆர்யா ‘சார்பட்டா 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இப்படம் பா. இரஞ்சித் இயக்கத்தில், அவரே தயாரிப்பாளராக உருவாகிறது. படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.

சார்பட்டா தொடரின் முதல் பாகம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டு படங்களையும் முடித்த பிறகு, சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் புதிய காமெடி படத்தையும் ஆர்யா திட்டமிட்டுள்ளார். இதற்காக மூன்று இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வைத்துள்ளார். பொருத்தமான கதையைத் தேர்வு செய்து, இருவரும் இணைந்து நடிக்கும் படம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிக மழையையும் சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் – துணை முதல்வர் உதயநிதி

அதிக மழையையும் சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் – துணை முதல்வர்...

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – புதிய உறுப்பினர் தேர்வில் அன்புமணி கோரிக்கை

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – புதிய உறுப்பினர் தேர்வில் அன்புமணி கோரிக்கை தமிழ்நாடு...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டைச் சதம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால்...

கந்தசஷ்டியை முன்னிட்டு திருப்போரூர், வல்லக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்

கந்தசஷ்டியை முன்னிட்டு திருப்போரூர், வல்லக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம் கந்தசஷ்டி...