காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தபோது, அதன் சுமையை மக்கள் மீது ஏற்றாமல் இருக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ‘ஆயில் பாண்டுகள்’ (Oil Bonds) வழங்கப்பட்டன.
இந்தப் பழைய கடன்களுக்கான அசல் தொகையான ₹1.53 லட்சம் கோடி மற்றும் அதற்கான வட்டித் தொகையான ₹1.70 லட்சம் கோடி என மொத்தமாக ₹3.23 லட்சம் கோடி மதிப்பிலான நிலுவைத் தொகையைப் பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசு முழுமையாகச் செலுத்தி முடித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பல தவணைகளாக வட்டியுடன் சேர்த்து இந்தத் தொகை கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், இந்தியப் பொருளாதாரம் நீண்ட காலக் கடன் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பிற்கு இந்தக் கடன் சுமையே முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தக் கடன்கள் அடைக்கப்பட்டிருப்பது நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.