இந்தி சினிமாவுக்கு செல்லப்போகிறாரா சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படம், வரும் பொங்கல் (ஜனவரி 14) அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு, ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் புதிய படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் திடீரென மும்பைக்கு சென்று, பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்துள்ளார். அவர் அலுவலகத்துக்குச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, சிவகார்த்திகேயன் ஒரு பான்-இந்தியா (Pan-India) இந்தி படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சிவகார்த்திகேயன் தரப்பில் தொடர்பு கொண்டபோது, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே” என விளக்கம் அளித்துள்ளனர்.