ராஷ்மிகா மந்தனாவுக்கு முக சிகிச்சை – போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுப்பு
தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்று, தற்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக விளங்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் நடித்த ‘தம்மா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அவர் ‘காக்டெயில் 2’ என்ற இந்தி படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
சாதாரணமாக விமான நிலையம் வந்தபோது புகைப்படக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கும் ராஷ்மிகா, இந்த முறை வித்தியாசமாக நடந்துகொண்டார். மும்பை விமான நிலையம் வந்த அவர், முகமூடி (மாஸ்க்) அணிந்தபடியே இருந்தார் மற்றும் புகைப்படக் கலைஞர்களிடம் போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.
புகைப்படக்காரர்கள் மாஸ்கை எடுக்கச் சொன்னபோது, அவர் “முகத்தில் சிகிச்சை செய்துள்ளேன்” என கூறியதாக தகவல். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, “ராஷ்மிகாவுக்கு என்ன ஆனது?”, “அவர் முகத்தில் உண்மையில் அறுவை சிகிச்சை செய்தாரா?” என ரசிகர்கள் ஆர்வமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அவர் அழகுக்காக முக சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.