“அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடலாம்” – கமலா ஹாரிஸ்
அமெரிக்க அரசியலில் ஒரு பெண் அதிபர் பதவி வகிக்கும் நாள் நிச்சயம் வரும் என ஜனநாயகக் கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக நிறுவனத்துக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது:
“என் பேரப்பிள்ளைகள் தங்கள் வாழ்நாளில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் பதவியேற்றிருப்பதை கண்டுகொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்தப் பெண் நானாக இருக்கக்கூடும். அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு உள்ளது, ஆனால் இதுவரை அதைப் பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று நம்புகிறேன்,” என்றார்.
“கருத்துக் கணிப்புகளை நான் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவற்றை கவனித்திருந்தால், நான் தேர்தலில் போட்டியிடவே மாட்டேன், இன்றைய நிலைமைக்கும் வரமாட்டேன். டொனால்டு ட்ரம்ப் என்னை குறித்த விமர்சனங்களைப் பொறுக்க முடியவில்லை,” என்றும் அவர் கூறினார்.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் விலகிய பின்னர், கமலா ஹாரிஸ் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் நினைவிற்குறியது.