“ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது”: போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

Date:

“ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது”: போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதே வேளையில் ஈரானுக்கு மீண்டும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலையில் ஈரானிடம் கடற்படை, விமானப்படை போன்ற தற்காப்பு அரண்கள் ஏதுமில்லை என்றும், அந்நாட்டின் தொலைத்தொடர்பு சாதனங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஈரான் போரில் இருந்த மிகப்பெரிய ஆபத்து மூன்று நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டதாகத் தெரிவித்த டிரம்ப், தாக்குதல் தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். இருப்பினும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுக்க முயன்றால், இதுவரை அவர்கள் சந்தித்ததை விட 20 மடங்கு அதிக வீரியத்துடன் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் என டிரம்ப் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும்...

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப்...

தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகை!

தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும்...

பெங்களூருவில் சிலிண்டர் தட்டுப்பாடு: இன்று முதல் உணவகங்கள் காலவரம்பின்றி மூடல்!

பெங்களூருவில் சிலிண்டர் தட்டுப்பாடு: இன்று முதல் உணவகங்கள் காலவரம்பின்றி மூடல்! மத்திய கிழக்கில்...