“அவர்கள் அனுபவம் நமக்கு உதவும்” – ரோஹித், கோலி குறித்து கம்பீர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பங்கேற்க உள்ளனர். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இருவரின் திரும்பிப் வருகை ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்கள் அனுபவத்தைப் பற்றி பேசினார்:
“உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. இந்த ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித், கோலி ஆகியோர் நமக்கு முக்கிய ஆதாரமாக அமையப்போகின்றனர். அவர்கள் தரமான வீரர்கள், அணிக்கு சேருவது நிச்சயம் பலனாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த முறையில் விளையாடி வருகிறது; அதே விதத்தில் அவர்கள் தங்களின் அனுபவத்தை அணிக்குச் கொடுப்பார்கள்.
நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயம் எளிதில் விளையாடி, களத்தில் தங்கள் மேஜிக்கை காட்டுவது தான். இந்த தொடர், அவர்களுக்கும் இந்திய அணிக்கும் சிறப்பானதாக அமையும்,” என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.