50 ஜெட் விமானங்கள் மூலம் ஈரானின் பதுங்கு குழிகளைத் தகர்த்த இஸ்ரேல்: மொசாட் தகவலால் அதிரடித் தாக்குதல்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கியப் பதுங்கு குழிகளை, 50 ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கியுள்ள அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத ஒப்பந்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த மோதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கொமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஈரானிய உயர்மட்டத் தலைவர்கள் அவசரகாலக் கட்டளை மையமாகப் பயன்படுத்தி வந்த பதுங்கு குழிகள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, 50 போர் விமானங்கள் மூலம் அந்தப் பகுதிகள் மீது சரமாரியாகக் குண்டுகள் வீசப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.