அமெரிக்காவுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் இடைக்கால உச்ச தலைவர் திட்டவட்டம்
தெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்த மோதல்களால் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசெண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ள மூத்த மதகுரு அயதுல்லா அராஃபி, அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.