5.93 லட்சம் மக்கள்தொகையுள்ள கேப் வெர்டே உலகக் கோப்பைக்கு தகுதி
2026-ம் ஆண்டு FIFA உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. இதில் பங்கேற்கும் அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன.
ஆப்பிரிக்க பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நேற்று முன்தினம் கேப் வெர்டே மற்றும் எஸ்வாட்டினி அணிகள் மோதின. இதில் கேப் வெர்டே 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
கேப் வெர்டே மக்கள் தொகை 5.93 லட்சம் மட்டுமே. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னேறிய மிகக் குறைந்த மக்கள் தொகையுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஐஸ்லாந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று, மிகக் குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு என்ற பெருமையை பெற்றது. அப்போது அந்த நாட்டின் மக்கள்தொகை 4 லட்சத்துக்கும் குறைவாக இருந்தது.