பாகிஸ்தானில் கலவரம்: அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் – துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!
கராச்சி: ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கடும் வன்முறை வெடித்துள்ளது. இதற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், கராச்சி நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தைக் கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.
வன்முறையில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சியின் போது ஏற்பட்ட மோதலில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் வன்முறை:
இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஸ்கர்து பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருக்கும் ஐநா (UN) அலுவலகம், ராணுவப் பள்ளி மற்றும் எஸ்பி (SP) அலுவலகம் ஆகியவற்றிற்குத் தீ வைக்கப்பட்டதால் அப்பகுதி போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்களால் பாகிஸ்தான் முழுவதும் ஒருவிதப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.