ஈரான் மீதான தாக்குதல்: ‘ரகசிய அறிக்கை’ வெளிப்படுத்திய திடுக்கிடும் தகவல்கள்! போருக்கான உண்மையான காரணம் இதுதானா?

Date:

ஈரான் மீதான தாக்குதல்: ‘ரகசிய அறிக்கை’ வெளிப்படுத்திய திடுக்கிடும் தகவல்கள்! போருக்கான உண்மையான காரணம் இதுதானா?

வாஷிங்டன் / வியன்னா: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடுத்ததன் பின்னணியில், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) வழங்கிய மிக ரகசியமான அறிக்கை ஒன்று முக்கியப் பங்காற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

சர்வதேச ஊடகங்கள் கசிந்துள்ள தகவலின்படி, ஐ.ஏ.இ.ஏ (IAEA) அண்மையில் அமெரிக்காவிற்கு வழங்கிய ரகசிய அறிக்கையில் பின்வரும் திடுக்கிடும் உண்மைகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது:

  • அணுசக்தி செறிவூட்டல்: ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்பதோடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக அளவில் யுரேனியத்தைச் செறிவூட்டி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இருப்பிடம் மர்மம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கு, எவ்வளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தங்களால் (IAEA) உறுதிப்படுத்த முடியவில்லை என்று அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
  • ஆய்வுக்கு முட்டுக்கட்டை: ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களுக்குள் நுழைந்து ஆய்வு செய்யத் தங்கள் அதிகாரிகளுக்கு ஈரான் அரசு அனுமதி மறுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிரடி முடிவு:

இந்த ரகசிய அறிக்கையைப் பெற்ற பின்னரே, ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு அதிபர் டிரம்ப் வந்ததாகத் தெரிகிறது. ஜெனீவாவில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரானின் அணுசக்தித் தளங்களைச் செயலிழக்கச் செய்வதே ஒரே வழி என அமெரிக்கா கருதியது.

“ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை வேடிக்கை பார்க்க முடியாது” என டிரம்ப் கூறியதற்கு இந்த அறிக்கையே அடிப்படை ஆதாரமாக அமைந்தது. இதற்கிடையில், இந்தத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் அணுசக்தி உட்கட்டமைப்புகள் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரியில் ‘பிஎம் இ-பஸ் சேவா’: 11 மின் பேருந்து சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

புதுச்சேரியில் ‘பிஎம் இ-பஸ் சேவா’: 11 மின் பேருந்து சேவைகளைப் பிரதமர்...

பாகிஸ்தானில் கலவரம்: அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் – துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

பாகிஸ்தானில் கலவரம்: அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் - துப்பாக்கிச் சூட்டில்...

கொடைக்கானலில் கள்ளச்சந்தை மது விற்பனை: திமுக – பாஜகவினர் இடையே கடும் மோதல்!

கொடைக்கானலில் கள்ளச்சந்தை மது விற்பனை: திமுக - பாஜகவினர் இடையே கடும்...

“ஸ்டாலின் ஏன் வரவில்லை?” – முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி!

"ஸ்டாலின் ஏன் வரவில்லை?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி! மதுரை:...