அயோத்தியில் அதிரடி: 13,000 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை!

Date:

அயோத்தியில் அதிரடி: 13,000 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சுமார் 13 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெயை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். ரமலான் மற்றும் ஹோலி பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில், சந்தையில் அதிக அளவில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.

பொதுமக்களின் புகாரை அடுத்து, அயோத்தியில் உள்ள முக்கிய எண்ணெய் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தரம் குறைந்ததாகவும், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த விற்பனை நிலையத்தில் இருந்த சுமார் 13,000 லிட்டர் கலப்பட எண்ணெயை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பண்டிகைக் காலத்தில் லாப நோக்கில் மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருநீர்மலை ஏரி சீரமைப்பு: தூர்வாரும் பணியில் மணல் கொள்ளையா? – பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு!

திருநீர்மலை ஏரி சீரமைப்பு: தூர்வாரும் பணியில் மணல் கொள்ளையா? - பொதுமக்கள்...

புதுக்கோட்டை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம்… தற்போதைய அமைச்சர்களின் செல்வாக்கைச் சோதிக்கும் களம்

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போது (பிப்ரவரி...

பெரம்பலூர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம்… உள்ளூர் பிரச்சினைகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணி

பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போது (பிப்ரவரி...

நாகப்பட்டினம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம்… “மீனவர் வாக்கு” – வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி

நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போது (பிப்ரவரி...