வளர்ந்த இந்தியாவை உருவாக்க வளர்ந்த கேரளம் அவசியம்” – மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்!
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு வளர்ந்த கேரளம் மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவது, அந்த மண்ணின் பாரம்பரியத்தை அதன் அசல் தன்மையுடன் உலகிற்கு வெளிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை மதித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது அம்மாநிலத்தின் கலாச்சாரப் பெருமையை மேலும் உயர்த்தும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்தை மீட்டெடுப்பதன் மூலம், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கேரளத்தின் பங்களிப்பு இன்னும் வலுப்பெறும் என அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.