சிறுவர் கதை புத்தகத்திற்கு புக்கர் பரிசு: 50,000 பவுண்டு பரிசுடன் தொடக்கம்
புக்கர் பரிசு அறக்கட்டளை, 8 முதல் 12 வயது சிறுவர்களுக்கான சிறந்த கதை புத்தகங்களுக்கு புக்கர் பரிசு வழங்க அடுத்தாண்டு முதல் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஆங்கில மொழியில் வெளிவரும் சிறந்த கதை புத்தகங்களுக்கு புக்கர் பரிசு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. பரிசு தொகை 50,000 பவுண்டாகும்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், குழந்தைகள் தலைமையிலான நடுவர் குழு சிறுவர் கதை புத்தகத்தை தேர்வு செய்வார்கள். புதிய பரிசு திட்டத்திற்கு விண்ணப்பிக்க அடுத்தாண்டிலிருந்து தொடங்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர் கதை புத்தகம் 2027 முதல் புக்கர் பரிசுக்கு உரிமை பெறும். அந்தப் புத்தகம் நேரடியாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட வேண்டும் அல்லது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.