“டென்மார்க்கில் குடியேறவில்லை” – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டாப்ஸி பன்னு
தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிற நடிகை டாப்ஸி பன்னு சமீபத்தில் டென்மார்க்கில் நிரந்தரமாக குடியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
‘ஆடுகளம்’, ‘காஞ்சனா 2’, ‘ஆரம்பம்’, ‘வை ராஜா வை’ போன்ற தமிழ் படங்களிலும், ‘பிங்க்’, ‘நாம் ஷபானா’, ‘தப்பட்’, ‘டுங்கி’ போன்ற இந்தி படங்களிலும் நடித்த டாப்ஸி, கடந்த ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து அவர் தனது கணவருடன் டென்மார்க்கு சென்றுவிட்டார், அங்குதான் நிரந்தரமாக குடியேற முடிவு செய்துள்ளார் என்ற வதந்தி பரவியது.
அந்த செய்திக்கு டாப்ஸி நேரடியாக பதிலளித்து,
“இதை விட குறைவான பொய்யுடன் இன்னும் பரபரப்பான தலைப்பு கிடைக்கவில்லையா? கொஞ்சம் ஆராய்ந்து எழுதுங்கள். இந்த ஈரமான மும்பையில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இப்படிப் பட்ட வதந்தி படிக்கிறேன்!”
என்று நகைச்சுவையுடன் மறுப்பு தெரிவித்தார்.