காஸ் டேங்கர் லாரி ஒப்பந்தம் 2026 வரை நீடிப்பு – வேலைநிறுத்தம் வாபஸ்
காஸ் டேங்கர் லாரிகளின் ஒப்பந்த காலத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கும் தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், மத்திய அரசின் ஆயில் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சமையல் எரிவாயு போக்குவரத்து பணிகளை செய்து வருகிறது. மொத்தம் சுமார் 5,000 லாரிகள் இதில் செயல்படுகின்றன.
இம்மாண்டு வாடகை ஒப்பந்தத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு பணியளிக்காததை எதிர்த்து, சங்கம் கடந்த 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது. இதனால் தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆயில் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, (அக்.14) முதல் மீண்டும் லாரிகள் இயங்கியது என்று அறிவித்து இருந்தனார்.