பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லியில் உள்ள Hyderabad House-இல், பிரதமர் Narendra Modi-யை எஸ்டோனியா அதிபர் Alar Karis சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக Estonia அதிபர் அலர் கரிஸ், Indiaவுக்கு வருகை தந்துள்ளார். இதையடுத்து, அவர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்பு, இந்தியா – எஸ்டோனியா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.