ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மார்ச் 9ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவையில் சபாநாயகருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அன்றைய தினம் விவாதம் நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூறினார்.
இதனிடையே, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.