ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த பில் கேட்ஸ்
ஆந்திரப் பிரதேசம் வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளை தலைவருமான பில் கேட்ஸ், மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாணை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆந்திர மாநிலச் செயலகத்திற்கு வருகை தந்த பில் கேட்ஸ், மாநிலத்தின் தொழில்நுட்ப மற்றும் சுகாதார வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து விவாதித்தார். மாநில வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, 2047ஆம் ஆண்டுக்குள் ஆந்திராவை முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சுவர்ணாந்திரா 2047’ தொலைநோக்குப் பார்வையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பில் கேட்ஸிடம் விளக்கினார்.
இந்த சந்திப்பு மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது