2 மாதங்களுக்கு பிறகு புதிய சிறைக்கு இம்ரான் கான் மாற்றம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2 மாதங்களுக்குப் பிறகு புதிய சிறைக்கு மாற்றப்படுவார் என சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்வேறு ஊழல் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தற்போது உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் மருத்துவக் குழு நடத்திய பரிசோதனையில், அவருக்கு சுமார் 85 சதவீதம் வரை கண் பார்வை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் புதிதாக திறக்கப்படவுள்ள சிறைக்கு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இம்ரான் கான் மாற்றப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.