நெஞ்சில் டாட்டூ உடன் அஜித் – வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நடிகர் அஜித்த்குமார் சமூக வலைதளங்களில் புதிய புகைப்படங்களுடன் வைரலாகி வருகின்றார். ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, அஜித் தற்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக அவர் அமைத்துள்ள ‘அஜித்த்குமார் ரேஸிங்’ அணி, துபாய், இத்தாலி, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ்களில் பங்கேற்றுள்ளது. அண்மையில் பார்சிலோனாவில் நடந்த ஒரு போட்டியில், அங்கு வந்த ரசிகர்கள் விசில் அடித்து ரகளை செய்ததால், கோபமடைந்த அஜித் விரலை அசைத்து “அமைதியாக இருங்கள்” என்ற சைகை காட்டினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
மேலும், கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயிலில், அஜித் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்தார். இந்த தரிசன புகைப்படங்களில் அவர் நெஞ்சில் டாட்டூ ஒன்றை போட்டிருப்பது கவனத்திற்கு வந்துள்ளது. இது உண்மையான டாட்டூதா, அல்லது அடுத்த படத்திற்காக தற்காலிகமாக வரையப்பட்டதா என்பது பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.