திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்

Date:

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்

மகா சிவராத்திரி விழாவை ஒட்டி திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த திருக்கோயிலில், அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் அதிக அளவிலான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் திரண்டனர்.

காலை முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், போதிய வசதிகள் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் விழா நாட்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த...

1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது

1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது சேலம்...

வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்

வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய சந்தேகம்: கொலை செய்யப்பட்டாரா?

ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய சந்தேகம்: கொலை செய்யப்பட்டாரா? பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய...