புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

Date:

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாளில், ஜம்மு-காஷ்மீரின் பகுதியில், ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற பாதுகாப்புப் படை வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், இந்திய வரலாற்றில் ஒரு துயரமான நிகழ்வாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தனது சமூக வலைதளப் பதிவில் பிரதமர் மோடி, “உயிரிழந்த வீரர்களின் தேசத்திற்கான சேவை மற்றும் தியாகம் எங்கள் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலின் நினைவு நாளையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து சிபிஎஸ்இ 12-ஆம்...

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல்

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல் 2016 முதல்...

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும் அதிர்ச்சி

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும்...

மேலும் 50 விமான நிலையங்கள்: மத்திய அரசின் 5 ஆண்டு இலக்கு

மேலும் 50 விமான நிலையங்கள்: மத்திய அரசின் 5 ஆண்டு இலக்கு டெல்லி:...