கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும் அதிர்ச்சி

Date:

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும் அதிர்ச்சி

கனடாவில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாகாணத்தின் என்ற சிறிய நகரில் இயங்கும் பள்ளியிலேயே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

பிப்ரவரி 10 ஆம் தேதி பள்ளியில் வழக்கமான வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் வளாகத்திற்குள் நுழைந்து தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த திடீர் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் கனடா முழுவதும் மட்டுமின்றி உலக நாடுகளிலும் அதிர்வலை ஏற்படுத்தியது. நாட்டில் 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என கனடா பிரதமர் அறிவித்தார். பல நாடுகள் தங்களது இரங்கலும் கண்டனமும் வெளியிட்டன.

தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல்கள்

இந்த தாக்குதலை நடத்தியவர் 18 வயதான ஜெஸ்ஸி வான் ரூட்செலார் (Jesse Van Rootselaar) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சம்பவம் நடைபெற்ற அதே பள்ளியின் முன்னாள் மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பல ஆண்டுகளாக மனநலம் தொடர்பான சிக்கல்கள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்பு சில முறைகள் போலீசார் அவரது இல்லத்துக்கு சென்று விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அவர் வைத்திருந்த சில ஆயுதங்கள் முன்பே பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் தொடங்கிய துயரம்

சம்பவ நாளன்று வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் தனது தாயையும் 11 வயது சகோதரனையும் சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் பள்ளிக்குச் சென்று மாணவர்களையும் ஆசிரியரையும் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் உயிரிழந்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய நபர் தன்னையும் சுட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காரணம் இன்னும் மர்மம்

இந்த தாக்குதலுக்கான துல்லிய காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2020 ஆம் ஆண்டு மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்திருந்தனர். அதன் பிறகு கனடாவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் மாணவர்களின் மனநலம், மற்றும் ஆயுதங்கள் எளிதில் கிடைப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து மீண்டும் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலின் 7-ஆம்...

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து சிபிஎஸ்இ 12-ஆம்...

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல்

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல் 2016 முதல்...

மேலும் 50 விமான நிலையங்கள்: மத்திய அரசின் 5 ஆண்டு இலக்கு

மேலும் 50 விமான நிலையங்கள்: மத்திய அரசின் 5 ஆண்டு இலக்கு டெல்லி:...