இந்தியா–பாகிஸ்தான் மோதல்: 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்
டி20 உலகக்கோப்பை தொடரில் மற்றும் அணிகள் மோதும் போட்டியை முன்னிட்டு விளம்பர கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியப் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி உலகளவில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஒளிபரப்பில் 10 விநாடி விளம்பரத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிற அணிகளுக்கிடையேயான போட்டிகளில் 10 விநாடி விளம்பரத்திற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இந்தியா–பாகிஸ்தான் மோதலின் வர்த்தக முக்கியத்துவத்தால் விளம்பர விலைகள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியின் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள நிறுவனம், இந்த ஒரே போட்டியின் மூலம் சுமார் 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என கணிக்கப்படுகிறது.