ராணுவ குடியிருப்புகளில் குடும்ப வரையறை விரிவு – ராஜ்நாத் சிங் அறிவிப்பு
பெற்றோர், உடன்பிறந்தோர் உள்ளிட்டோர் தங்க அனுமதி
ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் அரசு குடியிருப்புகளில் இனி பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரும் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, ராணுவ அதிகாரிகளின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அந்த வீடுகளில் தங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது “குடும்பம்” என்ற வரையறையை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி ராணுவ அதிகாரிகளின் மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் அந்த குடியிருப்புகளில் தங்கலாம்.
இந்த தீர்மானம், சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம், ராணுவ அதிகாரிகளின் குடும்ப நலனை முன்னிறுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.