இந்தியாவுடன் நடைபெறும் டி20 தொடர் – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Date:

இந்தியாவுடன் நடைபெறும் டி20 தொடர் – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இந்திய அணியுடன் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதில் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த ஒருநாள் தொடர் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவிருக்கின்றன.

இந்த டி20 தொடர் வரும் அக்டோபர் 29ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஆஸ்திரேலிய அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபாட் (முதல் மூன்று ஆட்டங்கள் மட்டும்), சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் துவாஷ்யஸ் (நான்காம் மற்றும் ஐந்தாம் ஆட்டங்கள் மட்டும்), நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட் (முதல் இரண்டு ஆட்டங்கள் மட்டும்), பேர்ட்மேன் (கடைசி மூன்று ஆட்டங்கள்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ குனமென், மிச்சேல் ஓவன், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா.

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், ரிங்கு சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் மழை பாதிப்பு: 215 நிவாரண முகாம்கள் தயார்

சென்னையில் மழை பாதிப்பு: 215 நிவாரண முகாம்கள் தயார் வங்கக் கடலில் உருவாகிய...

நீர்க்குமிழி’: கே.பாலசந்தரின் இயக்குநராக்கான பயம் மற்றும் நண்பர்களின் சென்டிமென்ட்

‘நீர்க்குமிழி’: கே.பாலசந்தரின் இயக்குநராக்கான பயம் மற்றும் நண்பர்களின் சென்டிமென்ட் மனித உறவுகளின் ஆழமான...

வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வணிக அமைச்சர் பியூஷ் கோயல்

வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வணிக...

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியடையும்: பிரதமர் மோடி நம்பிக்கை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியடையும்: பிரதமர் மோடி...