• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

எக்ஸ்பிரஸ் வேகத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சி – முப்பரிமாண மாடலில் புதுப்பொலிவு பெறும் புவனேஷ்வர் ரயில் நிலையம்

athibantv by athibantv
பிப்ரவரி 13, 2026
in Bharat
0
Home
👁️ 862 📋

எக்ஸ்பிரஸ் வேகத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சி – முப்பரிமாண மாடலில் புதுப்பொலிவு பெறும் புவனேஷ்வர் ரயில் நிலையம்

ஒடிசா மாநிலத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரூ.415 கோடி மதிப்பீட்டில் புவனேஷ்வர் ரயில் நிலையம் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக மாற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related posts

வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு! கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் 26 வயது இளம்பெண் வேட்பாளர்!

வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு! கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் 26 வயது இளம்பெண் வேட்பாளர்!

மார்ச் 31, 2026
கர்நாடகாவில் ஒற்றை யானை அட்டகாசம்: ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி!

கர்நாடகாவில் ஒற்றை யானை அட்டகாசம்: ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி!

மார்ச் 31, 2026

2024 மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் தலைநகர் புவனேஷ்வரை முக்கிய நகரங்களின் தரத்துக்கு உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் புவனேஷ்வர் நிலையம் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மையமாக மாற்றப்படுகிறது. ரயில் நிலையத்துடன் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் இணைக்கப்பட்ட ‘மல்டி மாடல்’ கட்டமைப்பாக இது உருவாகிறது. இந்த திட்டம் நடப்பாண்டின் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய தரத்தில் வசதிகளை வழங்கும் நோக்கில், ஆறு நடைமேடைகளை இணைக்கும் 108 மீட்டர் நீள ஏர்-கான்கோர்ஸ் அமைக்கப்படுகிறது. மேலும், 34 மின்தூக்கிகள், 20 எஸ்கலேட்டர்கள், ஓய்வறைகள், உணவகங்கள் மற்றும் நவீன விற்பனை மையங்கள் இடம்பெறுகின்றன. 11 மாடி மேற்குப் பகுதி கட்டிடம், 3 மாடி கிழக்குப் பகுதி கட்டிடம், பசுமை வளாகம், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவையும் திட்டத்தில் அடங்குகின்றன.

இடநெருக்கடி அதிகமுள்ள பகுதியில் முப்பரிமாண (3D) மாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இணைக்கப்படுவதால் பயணிகள் மாற்றுச் சேவைகளுக்கு எளிதாக மாறும் வசதி கிடைக்கும். பயண நேரத்தை குறைக்கும் வகையில் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவேறிய பின், புவனேஷ்வர் ஒடிசாவின் முக்கிய போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Bharat
Previous Post

காங்கிரஸ் பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு ஆன்லைன் மனு

Next Post

ப்ரொமோஷன் நிகழ்வில் கலந்துகொள்ளாத நடிகர் பிஜு மேனனை எதிர்த்து சட்ட நடவடிக்கை? தயாரிப்பாளர் அறிவிப்பு

Next Post
Home

ப்ரொமோஷன் நிகழ்வில் கலந்துகொள்ளாத நடிகர் பிஜு மேனனை எதிர்த்து சட்ட நடவடிக்கை? தயாரிப்பாளர் அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம்… மீண்டும் கைகோர்த்த கூட்டணி… சவால்கள் மற்றும் அரசியல் சூழல்

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு

ஏப்ரல் 1, 2026
“2 நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியல்: அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளது” – நயினார் நாகேந்திரன் அதிரடி அறிவிப்பு!

“2 நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியல்: அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளது” – நயினார் நாகேந்திரன் அதிரடி அறிவிப்பு!

ஏப்ரல் 1, 2026
தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சென்னையில் மையக்குழு கூட்டம்!

தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சென்னையில் மையக்குழு கூட்டம்!

ஏப்ரல் 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு
  • “2 நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியல்: அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளது” – நயினார் நாகேந்திரன் அதிரடி அறிவிப்பு!
  • தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சென்னையில் மையக்குழு கூட்டம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம்… மீண்டும் கைகோர்த்த கூட்டணி… சவால்கள் மற்றும் அரசியல் சூழல்

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு

ஏப்ரல் 1, 2026
“2 நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியல்: அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளது” – நயினார் நாகேந்திரன் அதிரடி அறிவிப்பு!

“2 நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியல்: அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளது” – நயினார் நாகேந்திரன் அதிரடி அறிவிப்பு!

ஏப்ரல் 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.