முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா
மகா கும்பமேளா நிகழ்வின் போது சமூக வலைதளங்களில் வைரலான மோனலிசா, தனது முதல் திரைப்பட வருமானத்தை கல்விக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் தெரு தோறும் பாசிமணி மாலைகள் விற்பனை செய்துவரும் நிலையில், அவரது கண்கள் இணையத்தில் பரவி ஒரே நாளில் பெரும் கவனம் பெற்றன. இதன் மூலம் நாடு முழுவதும் அறிமுகமானார்.
தற்போது மோனலிசா ஒரு இந்தி திரைப்படம் மற்றும் இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் அளித்த பேட்டியில், திடீரென கிடைத்த புகழ் தமக்கு புதிய பொறுப்பையும் உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். தனது சொந்த ஊரில் பெண்களுக்கான ஒரு பள்ளியை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான செலவை முதல் படத்தின் சம்பளத்திலிருந்து வழங்கவுள்ளதாகவும் மோனலிசா தெரிவித்தார்.