மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு
மாதாந்திர பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
தந்திரி மகேஷ் மோகனரின் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைக்கிறார்.
நடை திறப்பைத் தொடர்ந்து வரும் 17ஆம் தேதி வரை தினமும் காலை நெய் அபிஷேகம் மற்றும் இரவு படிபூஜை நடைபெற உள்ளது.
மாதாந்திர பூஜை நிறைவடைந்த பின், 17ஆம் தேதி இரவு 10 மணிக்கு மீண்டும் கோயில் நடை அடைக்கப்படும் என தேவஸ்வம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.