பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே நியமனம்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 சீசனுக்காக, பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய முன்னாள் வீரர் சாய்ராஜ் பஹுதுலேவை சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் சுனில் ஜோஷி பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக இருந்தார்; தற்போது 52 வயது சாய்ராஜ் பஹுதுலே அவருடைய பதவியை எடுத்துள்ளார். பஹுதுலே, இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவம் பெற்றவர்.