பிரபாஸ் – ஹனு ராகவபுடி கூட்டணியில் உருவாகும் ‘ஃபெளசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Date:

பிரபாஸ் – ஹனு ராகவபுடி கூட்டணியில் உருவாகும் ‘ஃபெளசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரபாஸ் மற்றும் இயக்குநர் ஹனு ராகவபுடி இணைந்து உருவாக்கும் புதிய படத்திற்கு ‘ஃபெளசி’ என்ற பெயரைப் படக்குழு சூப்பர் ஸ்பெஷல் ஃபர்ஸ்ட் லுக் வடிவில் வெளியிட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளன.

இந்த ஃபர்ஸ்ட் லுக், பிரபாஸ் பிறந்த நாளுக்கு முன்னிட்டு வெளியிடப்பட்டு இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1940களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள போஸ்டரில் எரிந்து கிழிந்த ஆங்கிலேய கொடியும், அதைச் சுற்றிய தீக்கதிர்களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் பிரதிபலிக்கின்றன.

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபெளசி’ படத்தில் நாயகியாக இமன்வி நடித்துள்ளார். மேலும் மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுதீப் சட்டர்ஜீ, இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் பணியாற்றுகிறார்கள். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் வங்களால மொழிகளில் வெளியாகவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பூண்டி ஏரியில் உபரி நீர் வெளியீடு 9,500 கன அடி அளவில் உயர்வு

பூண்டி ஏரியில் உபரி நீர் வெளியீடு 9,500 கன அடி அளவில்...

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டம்

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டம் கரூரில் செப்.27-ல்...

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே நியமனம்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே நியமனம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026...

“பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வது தற்கொலைக்கு சமம்” – டிடிவி தினகரன்

“பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வது தற்கொலைக்கு சமம்” – டிடிவி தினகரன் அமமுக...