தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாரபட்சம் – சீனா மீது குற்றச்சாட்டு
ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரருக்கு எதிராக சீனா ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுத்ததாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
சீனாவின் தியான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய இண்டோர் தடகளப் போட்டியில், ஆண்கள் 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தொடக்க சுற்றில் இந்திய வீரர் மணிகண்டா ஹொப்ளிதார் பங்கேற்றார்.
போட்டி தொடங்கிய தருணத்தில், அவர் தவறான தொடக்கம் எடுத்ததாகக் கூறி, நடுவர்கள் அவரை தகுதி நீக்கம் செய்தனர்.
ஆனால், வெளியான வீடியோ காட்சிகளை ஆராயும் போது, உண்மையில் தவறான தொடக்கத்தை எடுத்தவர் சவுதி அரேபிய வீரர் என்பதும், இந்திய வீரர் விதிமுறைகளை மீறவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
இதனால், போட்டி நடுவர்களின் தீர்ப்பில் நியாயம் இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், இந்திய வீரருக்கு எதிராக திட்டமிட்ட அநீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன.