ஆசிய இளையோர் விளையாட்டு: ரஞ்ஜனா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை
பஹ்ரைன், ரிஃபா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5,000 மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவின் ரஞ்ஜனா யாதவ் சிறந்த சாதனை அமைத்தார்.
அவர் 23 நிமிடங்கள் 25.88 விநாடிகளில் பந்தயத்தை முடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சீனாவின் லியு ஷியு (24:15.27) தங்கப் பதக்கத்தைப் பெற்றார், கொரியாவின் ஜியோங் சேயோன் (25:26.93) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.