சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் – பாஜக போராட்டம், போலீஸ் நடவடிக்கை

Date:

சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் – பாஜக போராட்டம், போலீஸ் நடவடிக்கை

கேரளாவில் சபரிமலை கோயிலில் தங்கம் காணாமல் போன சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜக இளைஞரணி நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு, கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போத்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த சூழலில், வழக்கை விரைவாகவும் முறையாகவும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

அவர்களின் முன்னேற்றத்தை தடுக்க, காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து நிறுத்தியதுடன், போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீச்சு வாகனத்தை பயன்படுத்தினர்.

எனினும், போலீசாரின் நடவடிக்கையை மீறியும், பாஜகவினர் அங்கிருந்து விலகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

துணைவேந்தர் நியமன தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு

துணைவேந்தர் நியமன தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தமிழ்நாடு அரசு...

டாஸ்மாக் பார் வளாகத்தில் தொழிலாளி உயிரிழப்பு – புகார் அளித்த பெண்களுக்கு போலீசார் முன்னிலையில் மிரட்டல்

டாஸ்மாக் பார் வளாகத்தில் தொழிலாளி உயிரிழப்பு – புகார் அளித்த பெண்களுக்கு...

சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரம் – சர்வதேச தீர்ப்பை நிராகரித்த இந்தியா

சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரம் – சர்வதேச தீர்ப்பை நிராகரித்த இந்தியா சிந்து...

புத்தகங்களைத் தாங்க வேண்டிய கைகளில் போதைப்பொருளா? – அண்ணாமலை கடும் கண்டனம்

புத்தகங்களைத் தாங்க வேண்டிய கைகளில் போதைப்பொருளா? – அண்ணாமலை கடும் கண்டனம் சென்னை...