எகிப்தில் காசா அமைதி உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு
பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதி குறித்த உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஹமாஸ் தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல்கள் தீவிரமாக இருந்தது. இதனால் காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சியில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது; கடந்த 10-ம் தேதி காசாவில் அது அமல்படுத்தப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டில் சுமார் 20 நாடுகள் பங்கேற்கின்றன. பிரதமர் மோடி பங்கேற்றால், இந்தியாவின் மத்திய கிழக்கு நிலை, பாலஸ்தீன ஆதரவு, அமெரிக்கா மற்றும் எகிப்து உடனான உறவுகள் போன்றவை உலகளவில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.