வண்ணங்களின் திருவிழா – இத்தாலியில் கோலாகலமாக நடைபெறும் வெனிஸ் கார்னிவல்
உலகின் மிகப் பழமையானதும், அதிகம் வண்ணமயமானதுமான திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘வெனிஸ் கார்னிவல்’ இத்தாலியின் வெனிஸ் நகரில் விமரிசையாக தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான வெனிஸ் கார்னிவல், “ஒலிம்பஸ் – விளையாட்டின் தோற்றம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மிலன்–கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, விளையாட்டு உலகத்தையும் வரலாற்றுச் சிறப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தத் தீம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பாரம்பரிய ஆடைகள் அணிந்து, வண்ணமயமான முகமூடிகள் தரித்த நூற்றுக்கணக்கானோர் படகுகளில் பங்கேற்ற நீர்வழி ஊர்வலம் நடைபெற்றது. கிராண்ட் கால்வாயில் நடைபெற்ற இந்த ஊர்வலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து, விழாவுக்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, வெனிஸ் நகரம் முழுவதையும் திருவிழா கோலாகலமாக மாற்றியுள்ளனர்.