வங்கதேச பொதுத் தேர்தல் – சர்வதேச கண்காணிப்பாளராக இந்தியாவை அழைத்த இடைக்கால அரசு
வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்கும் சர்வதேச பார்வையாளராக இந்தியா பங்கேற்க வேண்டும் என, அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 12ஆம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 50-க்கும் அதிகமான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,000 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்தச் சூழலில், தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்குப்பதிவை கண்காணிக்க சர்வதேச பார்வையாளர் குழுவாக இந்தியா பங்கேற்க வேண்டும் என வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளது.
அதே நேரத்தில், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்களை குறிவைத்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக இந்திய மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியா தனது பார்வையாளர் குழுவை அனுப்புவது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.