ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்
தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கோயிலில் அம்மனுக்கு 7 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. ஆந்திராவில் மக்கள் தசரா விழாவை பெருமையாக கொண்டாடி வருகின்றனர், கோயில்களில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்படுகின்றது.
சமீபத்தில் அமலாபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ரூ.4.41 கோடி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டதாகும். விசாகப்பட்டினம் குருபோம் மார்க்கெட் பகுதியில் உள்ள 148 ஆண்டுகள் பழமையான கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டில் கோயிலில் அம்மனுக்கு 7 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி ஆபரணங்கள், ரூ.5 கோடி மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 250 பெண்கள் குங்குமார்ச்சனை நடத்தினர். பக்தர்கள் கோயில் சுற்றுவட்டாரத்திலிருந்தும் தரிசனம் செய்தனர்.