பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: 133 பேர் உயிரிழப்பு
பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நடவடிக்கைகளில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 130-ஐ தாண்டியுள்ளது. அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்த மோதல்களில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், 92 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதேபோல், பஞ்ஜ்குர் மற்றும் ஹர்னாய் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தனித்தனி தாக்குதல்களில் மேலும் 41 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
இதன் விளைவாக, கடந்த இரண்டு நாட்களில் பலுசிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.