தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் எந்த விதமான திருத்தமும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4 லட்சத்தை மீறி ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரியும், ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீத வரியும், ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும் வசூலிக்கப்படும்.
மேலும், ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது