மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் – சுநேத்ரா பவார் பதவியேற்பு

Date:

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் – சுநேத்ரா பவார் பதவியேற்பு

மகாராஷ்டிர மாநில அரசியலில் புதிய வரலாறாக, அஜித் பவாரின் துணைவியார் சுநேத்ரா பவார், மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) புதிய தலைமையை தேர்வு செய்வதற்காக மும்பையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில், அஜித் பவாரின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுநேத்ரா பவார், கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, என்சிபி கட்சி தலைவர்கள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை நேரில் சந்தித்து, சுநேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஒப்படைத்தனர்.

பின்னர், மும்பையில் உள்ள மகாராஷ்டிர மக்கள் மாளிகையில் நடைபெற்ற அதிகாரபூர்வ விழாவில், சுநேத்ரா பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி காங்கிரஸ் மற்றும் மற்ற இண்டி...

மத்திய பட்ஜெட் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும்

மத்திய பட்ஜெட் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும் மத்திய...

வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!

வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக! கடலூர்...

மத்திய பட்ஜெட் 2026: ஆதிச்சநல்லூரில் கலாச்சாரப் பாரம்பரிய மையம் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2026: ஆதிச்சநல்லூரில் கலாச்சாரப் பாரம்பரிய மையம் அமைக்கப்படும் –...