EU வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திய அதிர்வெடிப்பு – பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசம் திணறல் | ஒரே ஒப்பந்தத்தில் நான்கு நாடுகளுக்கு செக் வைத்த இந்தியா!

Date:

EU வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திய அதிர்வெடிப்பு – பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசம் திணறல் | ஒரே ஒப்பந்தத்தில் நான்கு நாடுகளுக்கு செக் வைத்த இந்தியா!

ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், சாதாரண பொருளாதார உடன்படிக்கையாக மட்டும் இல்லாமல், இந்தியாவை அடிக்கடி சீண்டி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி ஆகிய நாடுகளுக்கு கடும் அதிர்ச்சியாக மாறியுள்ளது. அதே நேரத்தில், வரி விதிப்பு என்றாலே கர்ஜிக்கும் அமெரிக்காவுக்கும் இந்த ஒப்பந்தம் எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான 90 சதவீதத்துக்கும் மேலான சுங்க வரிகள் முற்றிலுமாக நீக்கப்படவோ அல்லது கணிசமாக குறைக்கப்படவோ உள்ளன. இதுவே இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது.

2032ஆம் ஆண்டுக்குள் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக அளவு இரட்டிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மட்டும் சுமார் 4 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு செலவுச் சேமிப்பு கிடைக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. இதன் தாக்கம் பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை எளிமையாகச் சொன்னால், “ஒரே ஒப்பந்தத்தில் நான்கு நாடுகளுக்கு அழுத்தம்” என்றே கூறலாம்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கும், வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கும், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான நெருங்கிய உறவு அபாய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த வர்த்தக ஒப்பந்தத்துடன் சேர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பும் வலுப்பெற்றுள்ளது. கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளை தளமாகக் கொண்டு செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் மீது இனி கூடுதல் கண்காணிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் அந்த வட்டாரங்களில் உருவாகியுள்ளது.

பூஜ்ய வரி சலுகையின் மூலம் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்து ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வந்த வங்கதேசம், இந்த புதிய ஒப்பந்தத்தால் பெரும் கவலையில் மூழ்கியுள்ளது. சமீபத்திய பேட்டியொன்றில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், குறைந்த வரி காரணமாக இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தை நோக்கி நகரும் என பெருமையுடன் கூறியிருந்தார். ஆனால், இப்போது இந்தியாவுக்கே நேரடி வரி விலக்கு கிடைத்ததால் அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, தற்போது 7 பில்லியன் டாலராக இருக்கும் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, எதிர்காலத்தில் 30 முதல் 40 பில்லியன் டாலர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய சந்தைகளில் இந்திய ஆடைகள் அதிக அளவில் இடம்பெறுவதால், தரம், விலை மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றில் வங்கதேச ஆடைகள் பின்தள்ளப்படும் சூழல் உருவாகும் வாய்ப்பு அதிகம்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிய துருக்கி, அதன் பின்னர் இந்தியாவுடன் உறவுகளில் விரிசலை சந்தித்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் உடனான இந்தியாவின் புதிய ஒப்பந்தம், துருக்கிக்கும் சிக்கலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. காரணம், ஐரோப்பிய யூனியன் குறைக்கும் வரி விதிப்பை துருக்கியும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இந்தியா துருக்கி மீது விதிக்கும் வரிகளை ஐரோப்பிய யூனியன் கட்டுப்படுத்த முடியாது. இதனை துருக்கி எவ்வாறு சமாளிக்கும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும், வரி மிரட்டல்களுக்கும் அடிபணியாத இந்தியா, அதிபர் டிரம்ப் வெளியிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், தனது பொருளாதார பாதையில் தைரியமாக முன்னேறியுள்ளது. அதற்கான பதிலடியாகவே, ஐரோப்பிய யூனியனுடன் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, இந்தியாவின் பெரும் சந்தை வாய்ப்புகளை அமெரிக்கா இழந்துள்ளது என்ற கருத்து அந்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் விவாதமாகி வருகிறது. டிரம்பின் கடுமையான வரி கொள்கைகள் அவருக்கே எதிராக மாறக்கூடும் என்ற அழுத்தம், அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே அதிகரிக்கக்கூடும்.

மொத்தத்தில், இந்தியா மேற்கொண்ட இந்த நுட்பமான வர்த்தக நடவடிக்கை, அமெரிக்காவின் பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு நேரடி பதிலாகவும், உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது என்பதே அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்...

கரூரில் நியூஸ் தமிழ் குழுவினருக்கு எதிரான தாக்குதலை பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டித்தன

கரூரில் நியூஸ் தமிழ் குழுவினருக்கு எதிரான தாக்குதலை பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டித்தன கரூரில்,...

போர் பதற்றம் உச்சத்தில்: இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு ஆயுத விநியோகத்திற்கு அமெரிக்கா பச்சைக்கொடி

போர் பதற்றம் உச்சத்தில்: இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு ஆயுத விநியோகத்திற்கு அமெரிக்கா...

ட்ரம்பின் அரசியல் துருப்புச் சீட்டா? மெலனியா ட்ரம்ப் ஆவணப் படம்

ட்ரம்பின் அரசியல் துருப்புச் சீட்டா? மெலனியா ட்ரம்ப் ஆவணப் படம் அமெரிக்காவின் முதல்...