HAL – ரஷ்யா SJ-100 பயணியர் விமான உற்பத்தி ஒப்பந்தம்
இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) இணைந்து, ரஷ்யாவின் புகழ்பெற்ற சூப்பர்ஜெட்-100 (SJ-100) பயணியர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம் ஹைதராபாதில் நடைபெற்ற “விங்ஸ் இந்தியா” சர்வதேச விமானக் கண்காட்சியில் அறிவிக்கப்பட்டது. “மேக் இன் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாக, HAL நிறுவனம் குறுகிய தூர இரட்டை இயந்திர பயணியர் விமானங்களை உற்பத்தி செய்யும்.
HAL தலைவர் டி.கே. சுனில் கூறியதாவது, ஒன்றரை ஆண்டுக்குள் சுமார் 10 விமானங்கள் உற்பத்தி தொடங்கும், இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சந்தை உள்ளதாகவும்.
மேலும், HAL நிறுவனம், தயாரிப்பு காத்திருக்காமல், ஆரம்பத்தில் 10–20 விமானங்களை ரஷ்யாவிடமிருந்து குத்தகை மூலம் வாங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 87–108 பயணிகள் அமரக்கூடிய SJ-100 விமானங்கள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்தி, இந்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.