352 மக்களவை தொகுதிகளில் என்டிஏ முன்னிலை – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
‘மூட் ஆஃப் தி நேஷன் சர்வே’ என்ற பெயரில் இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய புதிய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
மக்களவைக்கு தற்போது தேர்தல் நடைபெற்றால் யார் ஆட்சி அமைப்பார் என்பதை அறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்தக் கணிப்பின் படி, 2026 ஜனவரி நிலவரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மொத்தம் 352 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, இந்தியா (INDIA) கூட்டணிக்கு 182 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீத அடிப்படையில்,
- என்டிஏ கூட்டணிக்கு 47% வாக்குகள்,
- இந்தியா கூட்டணிக்கு 39% வாக்குகள்,
- பிற அரசியல் கட்சிகளுக்கு சுமார் 2% வாக்குகள் கிடைக்கும் என கணிப்பு கூறுகிறது.
மேலும், பாஜக தனியாகவே 287 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை 57 சதவீத மக்கள் ஆதரிக்கின்றனர் என்றும்,
‘ஆப்ரேஷன் சிந்தூர்’, டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட மிரட்டல்களுக்கு எதிரான நிலைப்பாடு, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.